இலங்கையில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடி - பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையின் பொருளாதார நிலைமையை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை தாங்க முடியாதது என மதிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் விம்பிள்டனின் பிரபு தாரிக் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றின் பிரபுக்கள் சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உட்பட இலங்கையின் பொருளாதார நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
"நிதி உதவிப் பொதி மற்றும் கடனை நிலையான பாதையில் கொண்டு செல்ல தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடனான ஆழமான விவாதங்களை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி திடீரென ஏற்பட்டதல்ல என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான நிலையில், பிரித்தானியா ஒரு பெரிய நன்கொடையை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு போன்ற நடவடிக்கைகளைப் பார்ப்பது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் பரந்த பிரச்சினையில், நமது முக்கிய பங்காளிகளுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
தனது இலங்கை விஜயத்தின் போது கூறியது போல் உள்கட்டமைப்பு மேம்பாடு என்று வரும்போது, முக்கிய பங்காளிகளுடன் எங்களுடைய சொந்த முயற்சிகள் மூலம், ஒரு நாடு கடனாளியாகாமல், அதன் கடனைச் செலுத்த அனுமதிக்கும் மாற்று வழியை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam