பிரித்தானியாவில் முதல் 10 இடங்களை பிடித்த செல்வந்தர்களின் பட்டியல் வெளியானது!
2020ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் புதிதாக 24 பில்லியனர்கள் உருவாகியுள்ளதாக The Sunday Times Rich List செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2020ம் ஆண்டில் பிரித்தானிய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது 22 சதவீதம் அதிகரித்து 597.2 பில்லியன் டொலர் அளவீட்டை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2020ம் ஆண்டு முடிவில் பிரித்தானியாவில் மொத்த பில்லியனர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரித்தானியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஒருவர் கூட பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் பிறந்த லியோனார்ட் பிளேவட்னிக் பிரித்தானியாவில் முதல் செல்வந்தராக இருக்கின்ற நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அவர் சுமார் 7.2 பில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் முதல் 10 இடங்களில் இருக்கும் செல்வந்தவர்கள்.....
1. Sir Leonard Blavatnik - Investment, music and media - £23bn, up £7.219bn
2. David and Simon Reuben - Property and internet - £21.465bn, up £5.465bn
3. Sri and Gopi Hinduja and family - Industry and finance - £17bn, up £1bn
4. Sir James Dyson and family - Household goods and technology - £16.3bn, up £100m
5. Lakshmi Mittal and family - Steel - £14.68bn, up £7.899bn
6. Alisher Usmanov - Mining and investment - £13.406bn, up £1.726bn
7. Kirsten and Jorn Rausing - Inheritance and investment - £13bn, up £900m
8. Roman Abramovich - Oil and industry - £12.101bn, up £1.945bn
9. Charlene de Carvalho-Heineken and Michel de Carvalho - Inheritance, brewing and banking - £12.013bn, up £1.713bn
10. Guy, George, Alannah and Galen Weston and family - Retailing - £11bn, up £470m