பிரித்தானியர்களை பாதுகாப்பதே முன்னுரிமை - சற்று முன்னர் ஸ்டார்மர் வெளியிட்ட தகவல்
ஈரானை தாக்காத பிரித்தானியாவின் நட்பு நாடுகளை ஈரான் தாக்கி வருவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
தற்போது, அவர் ஆற்றி வருகின்ற, மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போர்பதற்றம் குறித்த உரையில் இதனை குறிப்பிட்டார்.
மேலும் அவர், "நமது மக்களைப் பாதுகாப்பதே நமது முன்னுரிமை, தேசிய நலனுக்காக அமைதியான தலைமையை வழங்குவதே எனது கவனம்.
போரில் இணையவில்லை..
அதாவது பிரித்தானியாவை பாதுகாக்க இராணுவ மற்றும் ராஜதந்திர பலத்தைப் பயன்படுத்துவதாகும். ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் பிரித்தானிய நீண்டகால நிலைப்பாடு.
Watch live: my press conference on the situation in the Middle East. https://t.co/d89dxT9YNg
— Keir Starmer (@Keir_Starmer) March 5, 2026
அங்கு அவர்கள் தங்கள் அணுசக்தி இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். அதனால்தான் ஈரானுக்கு எதிரான ஆரம்ப தாக்குதல்களில் பிரித்தானியா இணையவில்லை. அந்த முடிவில் உறுதியாக இருக்கின்றோம்.
ஆனால் ஈரான், பிராந்தியத்தில் உள்ள நாடுகளைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மாறியது. எதுவாயினும், எங்கள் மக்களைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை" என்று கூறுகிறார்.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam