பிரித்தானியாவை அச்சுறுத்தும் குரங்கு அம்மை - மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி
பிரித்தானியாவில் மேலும் 11 பேர் குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒன்பது நோயாளர்களுக்கு மத்தியில் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள பெரும்பாலான நோயார்களுக்கு நோய் தொற்று தீவிரம் இல்லையென சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வெளியே மற்ற ஒன்பது நாடுகளில் கண்டறியப்பட்ட நோய் பரவல் குறித்து G7 சுகாதார அமைச்சர்களுக்கு புதுப்பித்தல் தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.
குரங்கு அம்மைக்கு எதிராக மக்களை பாதுகாப்பதற்காக பெரியம்மை தடுப்பூசிகளை பிரித்தானியா சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு வைரஸ்களும் ஒரே மாதிரியானவை என்பதால் குரங்கு அம்மைக்கு எதிராக ஒரு பெரியம்மை தடுப்பூசி நல்ல பாதுகாப்பை வழங்குகிறது என அவர் கூறியுள்ளார்.
மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே நோய் பரவல் அரிதானவை, எனினும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் தற்போது நோய் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில், பிரித்தானியா எவ்வளவு தடுப்பூசி பங்குகளை வாங்கியுள்ளது, அல்லது எத்தனை தடுப்பூசிகளை கொடுக்கப்படலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே, குரங்கு அம்மைக்கு எதிராகப் பயன்படுத்த ஆயிரக்கணக்கான பெரியம்மை தடுப்பூசிகளை முன்பதிவு செய்ய ஸ்பெயின் தயாராகி வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
