Grok செயலி குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பிரித்தானியா
எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பெண்களின் தகாத படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான Grokஐப் பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரிட்டிஷ் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான Ofcom இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Grok AIஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏராளமான ஆபாசப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதங்கள், சேவை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam