பிரித்தானியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் நிலவும் உணவு பஞ்சம் காரணமாக பசி பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா தற்போது கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியில் வாடி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனம் (IDS) நடத்திய ஆய்வில், 14 சதவீத பிரித்தானிய மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
உணவு பஞ்சம்
பிரித்தானியாவில் உணவு பெறுவதில் மக்களிடையே சமத்துவம் இன்மை மிக அதிகம் உள்ளதாகவும், தொண்டு நிறுவனங்கள் இதை சரிசெய்ய 10 ஆண்டுகளாக முயற்சித்தும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், 2022 செப்டம்பர் புள்ளிவிவரப்படி 97 லட்சம் மக்கள் உணவு பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர் பட்டினிக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் தொண்டு அமைப்புகளையே உணவுக்காக சர்ந்து இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |