பிரித்தானியாவில் மக்களுக்கு மானியம் வழங்க திட்டம் - வெளியான தகவல்
பிரித்தானியாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக முக்கிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி பிரித்தானியாவில் ஒவ்வொரு வீட்டிலும் வெப்ப பம்புகளை பயன்படுத்துவதற்காக குடும்பமொன்றுக்கு தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது வீட்டில் எரிவாயு கொதிகலன்களை மாற்றி, அதற்கு பதிலாக குறைந்த கார்பன் உமிழ்வை கொண்ட வெப்ப பம்புகளை பொருத்தும் குடும்பங்கள் இந்த மானியத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.
2035 இற்குள் புதிய தொழிநுட்பம் கொண்ட வெப்ப அமைப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கார்பன் இலக்கை அடைய முடியும் என்பதற்காக அரசு இந்த மானியங்களை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் ஏற்கனவே இருக்கும் புதைபடிவ எரிபொருள் கொதிகலன்களை அகற்ற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இல்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.