பிரித்தானிய பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெற இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதுவரையான கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளது.
மக்கள் ஆதரவு
இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் மார்ச் மாதம் 3.2 சதவிகிதமாக இருந்த விலைவாசி உயர்வு இன்று வெளியான அறிக்கையில் 2.3 சதவிகிதம் என பதிவாகியுள்ளது. அதாவது இங்கிலாந்து வங்கியின் 2 சதவிகிதம் என்ற இலக்கை மிகவும் நெருங்கியுள்ளதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல்களில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள கன்சர்வேடிவ் கட்சி பரப்புரையில் மக்கள் ஆதரவைப் பெற முடிந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதேவேளை ரிஷி சுனக் கட்சி 474 கவுன்சிலர்களை இழந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி போட்டியிடுவதில்லை எனவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
