பிரித்தானியாவில் தொடரும் நெருக்கடி! விசா விதிகளை தளர்த்த முடிவு
பிரித்தானியாவில் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த உள்விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், கட்டுமான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விசா விதிகளை தளர்த்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், கட்டுமான பணியிடங்களில் குறிப்பிட்ட பணிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளது.
விசா விண்ணப்ப கட்டணம் குறைப்பு
இதனையடுத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில், விசா விதிகளை தளர்த்த அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என விசா விதிகளை தளர்த்துவதற்கு பதிலாக நம் நாட்டின் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கலாம் என்ற கோரிக்கையை கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
இதற்கமைய, தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன், விசா விண்ணப்ப கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மொழி அறிவு சோதனை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |