பிரித்தானியாவில் 45 ஆண்டுகளின் பின்னர் உணவு பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரித்தானியாவின் உணவு பணவீக்கம் 45 ஆண்டுகளில் இல்லாதளவு 19.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதற்கமைய சமீபத்தில் வெளியான பணவீக்க அறிக்கையின் படி, உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலைகள் கடந்த 45 ஆண்டுகளில் பெப்ரவரியில் ஆண்டுக்கு 18 சதவீதமாக பதிவாகியுள்ளது.
பாண் மற்றும் தானியங்கள், இறைச்சி, மீன், பால், முட்டை, ஆலிவ் எண்ணெய், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன், உணவின் விலை மட்டும் 19.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை
இதற்கமைய, பாண் மற்றும் தானியங்களின் விலை 19.4 சதவீதமும், இறைச்சி விலை 17.4 சதவீதமும் உயர்ந்துள்ளதுடன் பால் விலை 37.9 சதவீதமும், முட்டையின் விலை 32 சதவீதமும் உயர்ந்துள்ளது.
மேலும் உக்ரைன் போரினால் ஏற்பட்ட விநியோக இடையூறுகள் காரணமாக ஆலிவ் எண்ணெயின் விலை கடந்த ஆண்டை விட 49.2 சதவீதமும் காய்கறிகளின் விலை 19.3 சதவீதமும், பழங்களின் விலை 10.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
உயர்வு பணவீக்கம் 21.9 சதவீதமாக மதிப்பிடப்பட்ட ஆகஸ்ட் 1977-ல் கடைசியாக உணவுப் பொருட்களின் விலை இந்த அளவுக்கு உயர்ந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.