பொருளாதார முதலீட்டில் பிரித்தானியாவின் பெரும் வளர்ச்சி
ஐரோப்பாவில் உள்ள முதலாவது 10 முதலீட்டு நாடுகளில் பிரித்தானியா (UK) முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ள பிரித்தானியா, பொருளாதார முதலீட்டில் ஜேர்மனியை தோற்கடித்து ஐரோப்பாவில் முதல் இடம்பிடித்துள்ளது.
பொருளாதார நிலை
PwC நடத்திய சர்வதேச ஆய்வு ஒன்றின், அடிப்படையிலேயே இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிரித்தானியா உலகளவில் முதலீட்டுக்கான முக்கிய நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதேவேளை, உலகளவில் முதலீட்டுக்களை அதிகம் ஈர்க்கும் முதல் நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முப்படை தாக்குதலுக்கு பின்னர் ஜேர்மனி எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய நிலையில், ஜேர்மனியில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலே முதலீட்டு நடவடிக்கையில் ஜேர்மனி பின்தள்ளப்பட்டதற்கு காரணம் எனவும் குறித்த ஆய்வு தெரிவிக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |