வயிற்றுக்கு வெளியே வளரும் உறுப்புக்களுடன் பிறந்துள்ள குழந்தை
பிரித்தானியாவின் கிரேட் மன்செஸ்டரில், கெஸ்ட்ரோசைஸிஸ் என்னும் பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கேஸ்ட்ரோசைஸிஸ் என்னும் பிறவி குறைபாடு என்பது, ஒரு குழந்தை தாயின் கருவில் வளரும் போது குழந்தையின் முன்புற உடல் சுவர் ஒன்றாக இணையாத நிலையாகும்
இதனால் குழந்தைக்கு வயிற்று தோல் முழுமையாக வளராமல் சிறிய துவாரம் காணப்படுகிறது.
உடலின் அந்த பகுதி சரியாக மூடப்படாததால் தொப்புளுக்கு வலதுபக்கமாக, உறுப்புகள் வளர வளர, அவை உடலில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளன
இந்தநிலையில் குறித்த அரிய வகை பாதிப்புக்குள்ளான குழந்த பிறந்த உடனேயே விசேட மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் உடலுக்கு வெளியே வந்துள்ள உறுப்புகள் அதிக வெப்பம் ஆகாமலும் காய்ந்து போகாமலும் இருக்க குழந்தையை மருத்துவர்கள் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர்.
தற்போது இந்த குழந்தை பிறந்து 5 வாரங்கள் ஆகின்றன. இந்த அபூர்வ குழந்தைக்கு கோயா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஹவாய் மொழியில் கோயா என்றால் போராளி என்று அர்த்தமாகும்.



காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
