முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்! இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது நாட்டிலிருந்த இலங்கை செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம் செய்துள்ளது.
அதன்படி, இறக்குமதிக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாமை காரணமாக இலங்கை தற்போது அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது. மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், நாட்டில் குறுகிய பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் டெங்கு மற்றும் கோவிட் தொற்று காரணமாக குறுகிய அறிவிப்பில் விமானங்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam