பெலாரஸ் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்! பிரித்தானியா அதிரடி நடவடிக்கை
Ryanair விமானத்தை போர் விமானத்தை பயன்படுத்தி கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தையடுத்து, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
"பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய” இந்த நடவடிக்கை அவசியம் என பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில், விமானத்தை இடைமறிப்பது "சிவில் விமான போக்குவரத்து மீதான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்" என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
ஊடகவிலாளரும், அரசுக்கு எதிரான விமர்சகருமான Roman Protasevichஐ தேடப்படும் நபராக பெலாரஸ் அறிவித்ததுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், போலந்து நாட்டில் இருந்த Roman Protasevich விமானம் மூலம் லிதுவேனியாவிற்கு பயணித்த போது, இதனை அறிந்த பெலாரஸ் FR4978- விமானத்தை போர் விமானம் ஒன்றை பயன்படுத்தி வழிமறித்தது.
அத்துடன், குறித்த விமானம் மின்ஸ்க் நகரில் தரையிறக்கப்பட்டு Roman Protasevich கைது செய்யப்பட்டார். பெலாரஸின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
இந்நிலையிலேயே, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
‘‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டும்’’ என கிராண்ட் ஷாப்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ‘‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரஸ் அரசுக்கு எதிராக மேலும் தடைகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.”
“பிரித்தானியாவிற்கான பெலாரஸ் தூதருக்கு இதுகுறித்து மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விமானம் மின்ஸ்க் திருப்பி விடப்பட்டது. ஜனாதிபதி லூகாஷென்கோ தனிப்பட்ட முறையில் MiG-29 போர் விமானத்தை பாதுகாப்பிற்காக அனுப்பி உத்தரவிட்டார் என பெலாரஸ் ஊடகங்கள்” தெரிவத்துள்ளன.