கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டுப் பெண்ணால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை பெருந்தொகை போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகாண்டாவிலிருந்து டோஹா வழியாக கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வருகை தந்த 47 வயதுடைய பெண் ஒருவரைச் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுத் தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தின் அடிப்படையில் அந்த பெண் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
கொக்கைன் மாத்திரைகள்
இதன் போது அந்தப் பெண்ணின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கொக்கைன் மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றின் மொத்த எடை 274 கிராம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1.23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல கொக்கைன் மாத்திரைகளை விழுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மருத்துவப் பரிசோதனை
இது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேக நபரையும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் சுங்க அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.