உகண்டாவில் கோர விபத்து... அறுபதுக்கும் மேற்பட்டோர் பலி!
உகண்டாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
கம்பாலா-குலு நெடுஞ்சாலையில் இன்றையதினம்(22.10.2025) எதிரெதிர் திசைகளில் பயணித்த இரண்டு பேருந்துகள், லொரி மற்றும் கார் ஆகிய இரண்டு வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துகளும் மோதியதால் அதனுடன் பயணித்த ஏனைய சில வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து பாதையில் கவிழ்ந்துள்ளன.
பொலிஸார் விசாரணை
விபத்தில், காயமடைந்தவர்கள் உகண்டாவின் மேற்கு நகரமான கிரியாண்டோங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பில் உகண்டா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்து ஏற்பட்ட நெடுஞ்சாலை உகண்டா நாட்டின் பரபரப்பான ஒரு நெடுஞ்சாலையாக கருதப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |