அமெரிக்காவில் மீண்டும் பறக்கும் தட்டு காணொளியை வெளியிட்ட பெண்
அமெரிக்காவில் (America) பறக்கும் தட்டுகள் (UFO) அடிக்கடி தென்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
வேற்று கிரக மனிதர்கள் அடிக்கடி பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும், மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்ட செயல்களை அவர்கள், செய்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றன.
இருப்பினும், இப்போது வரை வேற்று கிரக மனிதர்கள் வாழ்வதாகவோ, அவர்கள் பூமிக்கு வருவதாகவோ உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்காவில் பறக்கும் தட்டு
இதற்கிடையில் கடந்த மார்ச் 25 ஆம் திகதியன்று அமெரிக்காவில் பறக்கும் தட்டை பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.
நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்திலிருந்து விமானம் ஒன்று புறப்பட்டிருக்கிறது.
இந்த விமானம் போதுமான அளவு உயரத்தை எட்டியவுடன் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இதன்போது ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் இந்த பறக்கும் தட்டை பார்த்ததாக கூறியுள்ளார். அது ஒரு வாயுக்கொள்கலன் போன்று உருளையாக இருந்ததாகவும், அதனை அவர் காணொளியாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பெண்ணுடன், பயணித்த மற்றொரு பயணியும் இந்த மர்ம பொருளை பார்த்ததாக கூறியுள்ளார்.
UFO SPOTTED IN NEW YORK?
— Mario Nawfal (@MarioNawfal) April 26, 2024
Blink, and you will miss it - people claim to have seen a UFO from a passenger plane.
Source: @TheInsiderPaper pic.twitter.com/4onZWyM8v4
வானூர்தியாக இருக்க வாய்ப்பில்லை
எனினும் இது ஒரு ஆளில்லா வானூர்தி அல்லது இராணுவத்திற்கு சொந்தமான பொருளாக இருக்கலாம் என்று விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனை மறுக்கும் பறக்கும் தட்டு தொடர்பான வலையமைப்பின் இயக்குநரான தோமஸ் வெர்ட்மேன் என்பவர் ஆளில்லா வானூர்திகளோ அல்லது இராணுவத்தினரின் பொருளோ இந்தளவு உயரத்தில் பறக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஏன் இந்த பறக்கும் தட்டுக்கள் அமெரிக்கர்களின் கண்களுக்கு மாத்திரம் தென்படுகின்றன என்று சமூக ஊடக பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |