உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரம் 103ஆவது பிறந்த நாள் அனுஷ்டிப்பு
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவருமான உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரத்தின் 103ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, இன்று(20.07.2026) 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவருடைய திரு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரத்தின் நினைவுகள் நினைவு கூரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், தங்க முகுந்தன், முன்னாள் கிராம சேவையாளர் ரவிக்குமார், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் கு. சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

