கையடக்க தொலைபேசிகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியின் பலனை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டொலரின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(05.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.28 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |