பொலிஸாரை விமர்சித்த கஜேந்திரகுமார் தற்போது அவர்களையே கொழும்பு வீட்டின் பாதுகாப்பிற்காக நிறுத்தியுள்ளார்! கம்மன்பில கிண்டல்
பொலிஸாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது பொலிஸாரை தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்பிற்கு நிறுத்தியுள்ளதாக புதிய ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது அவருக்கு வெட்கக்கேடான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனவாத கருத்துக்கள் மூலம் அரசியல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியில் இனவாத கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார்.

கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முற்கூட்டியே பெருமளவு பொலிஸாரைத் தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.
கஜேந்திரகுமாருக்குத் துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிஸாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும் என சவால் விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தனது தம்பிகளால் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam