உத்திக பிரேமரத்ன எம்.பிக்கு நீதி கிடைக்க வேண்டும்: சஜித் தரப்பு வலியுருத்து
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (19.09.2023) உறையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
விசாரணை
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு ஆகும்.
தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். எம்.பி.யின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பு ஆகும்.
சம்பந்தப்பட்ட எம்.பி.யின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தாக்குதல் குறித்து விரைந்து விசாரணை நடத்தி சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.



