ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு: மிரட்டும் கம்மன்பில
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நாட்டின் 22 மில்லியன் மக்களின் தலைவரும் படைச் சேனாதிபதியுமான ஜனாதிபதி மிகுந்த பயந்த சுபாவம் உடையவராக காணப்படுகின்றார் எனஅவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி பொறுப்பினை ஏற்பதற்காக ஆரம்பத்தில் பொய்களை கூறிய ஜனாதிபதி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் தொடர்ந்து பொய்களை கூறி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும் இந்த நாட்டில் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் இருந்து மக்களை பாதுகாக்க கூடிய வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் அவருக்கு எதிராக நிச்சயம் தாம் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் தன்னிடம் வந்து கெஞ்சி வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வாயை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊன்றுகோல் ஒன்றுக்கும் ஊசிகளுக்கும் அஞ்சும் ஜனாதிபதியாகவே அநுரகுமார திசாநாயக்க இருக்கின்றார் என தெரிவித்துள்ளார். இவரிடம் எவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் ஒப்படைப்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அச்சம் ஏற்படுவது மனித சுபாவம் என்றாலும் நாட்டின் படைத்தளபதி என்ற வகையில் அதனை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நாட்டின் படை சேனாதிபதியான ஜனாதிபதி அச்சமடைகிறார் என மக்கள் புரிந்து கொண்டால் அவர்கள் பதற்றம் அடைய கூடும் என தெரிவித்துள்ளார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri