வீண் அச்சம் வேண்டாம்! திடீரென ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் அமைச்சர் விளக்கம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக வெளியாகும் செய்திகளை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya gammanpila) மறுத்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக கூறி வந்தனர். எனினும் கடந்த நான்கு மாதங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கம்மன்பில,
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமாயின் அது குறித்து முன்கூட்டியே அறிவிப்பதாக நான் வாக்குறுதி வழங்கியுள்ளேன். அதேபோல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருக்கின்றது, எனினும் அதனை தவிர்க்க நடவடிக்கை எடுப்போம் என செப்டம்பர் 29 ஆம் திகதி நான் கூறினேன்.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எந்த வகையிலும் பெட்ரோல், டீசல், மண் எண்ணெய் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நாட்டில் எந்த எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை, வீணாக குழப்பமடைய வேண்டாம் என மீண்டும் ஊடகங்களுக்கு முன் தோன்றி கூற வேண்டியுள்ளது.
ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே இருக்கும். மக்கள் குழப்பமடைந்து, அனைவரும் தமது வாகனங்களின் எரிபொருள் கலன்களை நிரப்பிக்கொண்டால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது சாதாரணமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
