முள்ளிவாய்க்கால் கஞ்சி சிறுவர்கள் நெஞ்சில் பிரிவினை விசத்தை விதைக்கிறது....கம்மன்பில கிளப்பும் சர்ச்சை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் வழங்கப்படும் கஞ்சி தொடர்பில் உதயகம்மன்பில சர்ச்சக்குரிய கருத்துக்களையும் அதன் நோக்கத்தை திருபுபடுத்தும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் ஒவ்வொரு வருடமும் பேரினவாதிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பது 17 வருடங்களாக நடைபெற்று வருகிறது.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ராஜபக்ச கும்பலே இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபடுவது காணக் கூடியதாக இருக்கிறது.
விதைக்கப்படும் சிந்தனை மாற்றம்
பிரிவினைவாத சிந்தனை மற்றும் பிரவினைவாதம் என்ற நஞ்சை சிறுவர்களின் மனதில் விதைப்பதற்காகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதாக பிவித்துறு ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்று நடத்திய அரசியல் கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள்.
சிங்கள மக்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அரக்கன் என்ற சிந்தனை தமிழ் மக்களின் புதிய தலைமுறையினருக்கு பெருந்தாது என அறிந்து கொண்டுள்ளனர்.

முன்னர் வடக்கு - தெற்கும் பிரிந்தே காணப்பட்டது. போக்குவரத்தில் இருந்து எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை.
அதனால் சிங்கள மக்கள் தொடர்பில் எதைவேண்டுமானாலும் சொல்லலாம்.ஆனால் இன்று அந்த செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.
இந்தவகையில் இன்னும் பத்து வருடங்களில் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்கள் தொடர்பான சிந்தனையில் மாற்றம் ஏற்படலாம். அது மட்டும்மல்ல இன்றுள்ள மூத்த தலைமுறையினருடன் பிரிவினைவாத சிந்தனை மறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறான சம்பிரதாயங்களை முன்னெடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.