இராணுவ முகாம் அகற்றலுக்கு விடுதலை புலிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் "மக்கள் பாதை" என்ற தொனி பொருளில் இராணுவ முகாம்கள் அகற்ற முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், "மக்கள் வாழும் பகுதியில் இராணுவ முகாம்களை அமைப்பது சட்டவிரோதமானது என்கிறார் சுமந்திரன்.
இராணுவ முகாம்கள்
அதனாலேயே இராணுவ அடக்குமுறைகள் நிகழ்கின்றன என்கிறார். அவ்வாறு என்றால் இலங்கையில் அதிக மக்கள் வாழும் ஹோமாகம பகுதியிலே பாரிய இராணுவ முகாம் இருக்கிறது.
இங்குள்ள மக்கள் இராணுவ முகாமுக்கு உள்நுழைய அஞ்சுவர், ஏனென்றால் முகாமுக்குள் நுழைந்தால் சுட்டு விடுவார்கள் என்ற பயம். அவ்வாறு சிந்திக்கவே மாட்டார்கள். அப்படியானால் குறித்த இளைஞர்களை யாராவது தூண்டி விட்டுள்ளனர்.
இது திட்டமிடப்பட்ட செயற்பாடாகவே தோன்றுகிறது. இராணுவ முகாமுக்குள் இரும்புகள் களவாட செல்வது லேசான காரியமல்ல. அவர்கள் யாராவது ஒருவரின் தூண்டுதலுக்கு பலிகாடா ஆகியிருக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் காலத்தில் யுத்தம் செய்து கூட ஒரு முகாமையாவது அகற்ற முடியாத நிலையில். பிரிவினைவாத ஆதிக்கத்தின் ஒரு செயற்பாடகவே நான் பார்க்கிறேன்.
கதவடைப்புக்கு பின்னால் இருக்கும் சக்தியை அரசாங்கம் கண்டுபிடித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
