கோட்டாபய, மகிந்த, மைத்திரி, சஜித்தின் முன் சொன்ன பெயர்! 3 முறை பெயரை அடித்து சொன்ன கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்தும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பில் நேற்று 31ஆம் திகதி வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் சென்றிருந்தனர்.
நாடே எதிர்பார்த்திருந்த குறித்த சந்திப்பு தொடர்பில் பல்வேறு விடயங்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,