மத்திய வங்கி நூல் அறுந்த பட்டம் போன்று செயற்படுகின்றது
இலங்கை மத்திய வங்கி நூல் அறுந்த பட்டம் போன்று செயற்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பணியாளர்களது சம்பள அதிகரிப்பு நிதி அமைச்சரின் அனுமதிக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சரின் அனுமதி
மத்திய வங்கி பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஏனைய துறைகளில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது நிதி அமைச்சரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
மத்திய வங்கியின் பணியாளர்களது சம்பளங்களும் நிதி அமைச்சரின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும்.
மத்திய வங்கி அரசின் பிடியிலிருந்து விலகியதனால் இவ்வளவு பாரிய தொகை சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ள முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
