சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ப. சத்தியலிங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்து பலர் தரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், "முன்னதாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத யாரும் இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார்.
அது மாத்திரமின்றி, இத்தேர்தலில் சிறீதரன் போட்டியிட கூடாது என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இவ்வாறிருக்கையில், தற்போது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தெரிவில் தோல்வியடைந்துள்ள ப. சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் மூலம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளமைக்கு சுமந்திரனே பதில் கூறியாக வேண்டும்” என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்த விடயங்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri