சுமந்திரனின் முறைப்பாட்டால் கூட்டமைப்புக்கு நெருக்கடி! நீதிமன்றம் செல்லும் தமிழ் எம்.பிக்கள்(Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் திணைக்களத்தில் புகார் கொடுத்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கட்சி என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது நான்கு காட்சிகள் அதில் அங்கம் வகித்தன. அன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரையில் சில கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து இணைந்தன.சில கட்சிகள் வெளியில் சென்றன.
இவ்வாறு என்ன நடந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் பெயரோடு தான் இயங்கி கொண்டு வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கிய காலத்தில் இருந்து அதற்கு ஒரு கட்டமைப்பு இருக்கவில்லை. அது தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை.
அதை புதிதாக ஒரு கட்சியாக பதிவு செய்யாமல் அதற்குரிய சின்னத்தில் அதே பெயரில் பதிவு செய்த போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அந்த பெயரை பயன்படுத்த கூடாது என தேர்தல் திணைக்களத்தில் புகார் கொடுத்துள்ளார்.”என கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
