ரணில் வெளியேறினால் அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்துக்கள்(Video)
ராஜபக்சர்களால் எதையும் செய்ய முடியாத நிலையில் தான் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு ராஜபக்சர்கள் அவரை பிரதமர் ஆசனத்தில் அமர வைத்தார்கள் என அரசியல் ஆய்வாளர் யதீந்ரா தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரவிக்கையில்,
இலங்கை வரலாற்றில் இதுவரை காணாத அளவு ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக உறுமாறியுள்ளது.
இந்த அரசியல் நெருக்கடியை சமாளித்து, ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பை தற்போது ரணில் விக்ரமசிங்க ஏற்றிருக்கின்றார்.
ராஜபக்சர்கள் தொடர்பில் சிங்களவர்களின் புரிதல்
ராஜபக்சர்கள் மோசமான வீழ்ச்சியை சந்தித்திருக்கின்ற நிலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தவொரு ஆற்றலோ, ஆளுமையோ ராஜபக்சர்களிடம் இல்லை என்பதை சிங்களவர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டை முன்கொண்டுச் செல்லும் ஒரு பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றிருக்கின்றார். அவர் ஒரு பலமான பிரதமராக செயற்படுகின்ற நிலையில்தான் இந்த அரசாங்கத்தை முன்கொண்டுச் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
