கோட்டாபயவை இறுக்கிப் பிடிக்கும் பைடன் - மோடி அரசாங்கங்கள்! காப்பாற்றும் முயற்சியில் தமிழ் பெண்
சர்வதேச நாணய நிதியத்திற்கும், இலங்கைக்கும் இடையில் ஒரு உடன்பாடு வரும் போது கூட உத்தரவாதம் வழங்க ஒருவர் தேவை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அந்த உத்தரவாதம் வழங்குநராக இந்தியாவை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிற்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கையில் இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை தன் வயப்படுத்துவதிலே தான் மோடி அரசாங்கமும், பைடன் அரசாங்கமும் தீவிரமாக இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
ஆம் நிச்சயமாக. அதில் பெரிய மாற்றுக்கருத்து இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விரிவான விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,