அச்சத்தில் முடிவை மாற்றிய கோட்டாபய! தயங்கும் இராணுவம் (Video)
சிங்கள மக்களுக்கு அஞ்சி முடிவுகளை மாற்றும் நிலையில் கோட்டாபய இருப்பதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் போராட்டங்கள் வியாபிக்க ஆரம்பித்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய இராணுவ பரிவாரங்களை தனக்கு சார்பாக இவ்வாறான விடயங்களில் பயன்படுத்திக் கொள்வாரா என்கின்ற கேள்வி இருந்தது.
ஒரு இராணுவமயப்படுத்தப்பட்ட ஆட்சி முறைமைக்கு அவர் நாட்டை இட்டுச் செல்வாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
ஆனால் தொடரும் மக்கள் போராட்டங்கள் ஒன்றை தெளிப்படுத்தியுள்ளது, சிங்கள மக்களுக்கு எதிராக எந்த விதத்திலும் அவ்வாறு நடந்து கொள்ள கோட்டாபய தயாராக இல்லை என்பதை.
இலங்கை இராணுவம் மக்களின் நெருக்குவாரமாக மாறுமா என்றால் நிச்சயம் பதில் இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
சிங்கள மக்களுக்கு அஞ்சி முடிவுகளை மாற்றும் நிலையில் கோட்டாபய இருக்கிறார். ஏனெனில் சிங்கள மக்களை தங்கி தான் அவருடைய இருப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam