கோட்டாபயவை நெருங்கிய மிக முக்கிய அரசியல் பிரபலம்! புதிய பிரதமராக மீண்டும் முயற்சி
இப்போது இருக்கக்கூடிய அரசை காப்பாற்றுவதில் முழுமையான முயற்சியில் ஈடுபடக்கூடிய ரணிலுக்கு இதன்மூலம் கிடைக்கவுள்ள அநுகூலம் என்ன என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்பு செயலாளருமான உமா சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாச எக்காரணம் கொண்டும் ஒரு பிரதமராக வரக்கூடாது என்பதற்கான நகர்வுகளைத் தானா இப்போதும் ரணில் தென்னிலங்கையில் மேற்கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஐக்கிய மக்கள் சக்தியை இணைப்பதற்கோ ஆன முயற்சிகள் அவர்கள் பக்கமிருந்து உருவாகவில்லை.
எனவே இதிலிருந்து தெரிகிறது ராஜபக்ச அரசை பாதுகாப்பதில் முன்னாள் பிரதமரின் பங்கு இருக்கும் என்பது பொதுமக்களின் நிலைப்பாடு. அண்மைக்காலமாக பல செய்திகள் வருகின்றன.
ரணில் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார், ஒரு தேசிய அரசு உருவாக இருக்கிறது இவ்வாறான செய்திகள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கின்றன.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரம் தான் இருக்கிறது.
எனவே இந்த ஒரு சந்தர்ப்பம் என்பது தற்போதைய அரசை பாதுகாப்பதற்காக செயற்படக்கூடிய ஒருவரின் நடத்தையாக தான் நாங்கள் பார்க்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.