உக்கிரமடையும் உக்ரைன் - ரஷ்ய போர்! இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து (Video)
உலகில் எந்தவொரு நிகழ்வு நடந்தாலும் அது இலங்கையை கடுமையாக பாதிக்கிறது என பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கும் கலாநிதி பிரபாகரன் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
'உக்ரைன் - ரஷ்ய யுத்த களமுனையோடு நாம் இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. அதன்படி இலங்கை அரசும் இதற்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது போன்றதொரு நிலைப்பாட்டை தான் அண்மைய செய்திகள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. இலங்கையிலும் இடம்பெறுகிறது ஓர் பொருளாதார நெருக்கடி. ஆனால் அதற்குள்ளும் உக்ரைன் ரஷ்யா யுத்தத்தின் பாதிப்புகள் அதிகளவாக இருப்பதாகவே இப்போது உணரப்படுகிறது. ரஷ்யாவிற்கான விமான சேவைகளை எந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி இலங்கை நிறுத்தியிருக்கிறது. இது தொடர்பான உங்கள் பார்வை எப்படி இருக்கிறது' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
ஆம். ஆனால் இவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக எதனையும் செய்யவில்லை. ஆனால் உலகில் எந்தவொரு நிகழ்வு நடந்தாலும் அது இலங்கையை கடுமையாக பாதிக்கிறது. உதாரணமாக கோவிட்டும் கடுமையாக பாதித்தது.
அதேபோல உக்ரைன் சமர் கூட இலங்கையை கடுமையாக பாதித்துள்ளது. ஏனெனில் இலங்கைக்கு உல்லாச பயணிகளாக பெருமளவு ரஷ்யர்கள் தான் வருகிறார்கள்.
தற்போது ரஷ்யாவிற்கான விமான சேவையை நிறுத்தியமையானது தற்போது உயிர் பெற்று வரும் உல்லாச பயண துறையும் படுத்துவிடும் நிலைமையை தான் ஏற்படுத்துகிறது.
அதேபோலே தேயிலை, இறப்பர் உள்ளிட்ட ஏற்றுமதிகள் இதனால் பாதிக்கலாம். இலங்கையை பொறுத்தவரை இதனை ஒரு நிரந்தர பாதிப்பாக தான் பார்க்க முடியும் என கூறியுள்ளார்.
இதேவேளை 'இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறானதொரு மின்தடை ஏற்பட்டதற்கான சான்று இருக்கிறதா' என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
இவ்வாறானதொரு நீண்ட நேர மின்வெட்டு என்பது இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் குறித்த யுத்த பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தென்னிலங்கை மக்களுக்கு இது ஒரு புதிதான விடயமாகவே இருக்கும். 13 மணித்தியாலங்கள் மின்சாரம் இல்லை என்பது மட்டுமல்ல, அதற்கு மேலாக அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது என கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,