சிங்கள மக்களின் நம்பிக்கையாகும் பிரபாகரன் என்ற நாமம்! விழி பிதுங்கும் இலங்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற நாமத்தையே அதிகளவில் தென்னிலங்கையில் இருக்கக்கூடிய மக்களும் உச்சரிக்கிறார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, விடுதலைப் புலிகளின் தலைவரை தென்னிலங்கையில் இருக்கக்கூடிய மக்களும் தானே அதிகமாக தேடுகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
சம்பந்தனோ, சுமந்திரனோ, கஜேந்திரனோ, விக்னேஸ்வரனோ தான் வந்து எங்களை காப்பார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை.
அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற நாமத்தை தான் உச்சரிக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் பிரபாகரன் என்ற ஒருவரால் தான் அது முடியும் என நம்புகிறார்கள். இதை இன்று இருக்கக்கூடிய தலைவர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,