வரலாறு காணாத நெருக்கடியில் நாடு! வைப்பிலிட்ட புலம்பெயர் இலங்கையர்களின் நிலை என்ன... (Video)
இலங்கையில் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெறுமதியானது மிக மோசமாக வீழ்ச்சியடைந்து விட்டது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதன்போது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கணிசமானோரின் பணம் இலங்கையில் வைப்பிலிடப்பட்டிருக்கிறது அல்லது இலங்கையில் அந்த பணம் அதிகரிக்கிறது என்கிற போது, அதிகளவில் இவ்வாறான பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் புலம்பெயர்ந்திருக்க கூடிய ஒரு தமிழராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
பெரும்பாலானோர் தாயகத்தில் முதலீடு செய்துள்ளனர். வீடுகள் கொள்வனவு செய்துள்ளனர். சில தொழிற்சாலைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் போடப்பட்ட முதலின் பெறுமதி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட வீட்டின் விலை கூடியிருக்கலாம். ஆனால் ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு ஸ்ரேலிங் பவுண்ட் 250 ரூபாவாக இருந்தது இப்போது 335ரூபாவாக ஆகிவிட்டது. இலங்கையில் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெறுமதியானது மிக மோசமாக வீழ்ச்சியடைந்து விட்டது.
ஆகவே வைப்பிலிட்டவர்களுக்கு நட்டம். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது சேமித்து வைக்கப்பட்ட பணத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,




