ஐ.நாவில் திட்டமிட்டு நீக்கப்பட்ட தமிழ்! ஆபத்தாகும் எதிர்காலம் (Video)
ஐ.நாவில் திட்டமிட்டு தமிழ் தவிர்க்கப்படுவதாக உலகத் தமிழர் மக்கள் இயக்க மக்கள் தொடர்பாளர் நிசா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, பாதிக்கப்பட்ட தரப்பு தமிழர் தரப்பு, காணாமலாக்கப்பட்ட தரப்பு தமிழர் தரப்பு, இலங்கையில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைக்குள் அவதிப்படுகின்ற தரப்பு தமிழர் தரப்பு என இந்த தமிழ் என்கின்ற சொல்லாடலை ஐ.நா மனித உரிமைகள் சபையில் பயன்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது அல்லது அதனை பயன்படுத்துவதை திட்டமிட்டு தவிர்க்கின்றார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். எங்களை சொல்லும் போது தமிழீழம் என சொல்வது கிடையாது. குறைந்த பட்சம் தமிழர்கள் என சொல்வது கிடையாது. இனப்படுகொலை என்று சொல்வது கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri