அமைச்சுப் பதவிக்கு முனைப்பு காட்டும் கூட்டமைப்பின் சிலர் - பசிலின் வருகைக்கு பின்னரான மாற்றம்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலருக்கு அமைச்சு பதவி மீதான ஆசை இருக்கலாம் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதன்போது, உங்களிடம் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படுவதாக எடுத்துக் கொள்ளலாமா? என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், சிலர் ஆசைப்படுவார்கள் ஆனால் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் தானே. ஒரு சிலருக்கு அந்த ஆசை இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பசிலின் வருகைக்கு பின்னரான மாற்றங்கள் தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri