யாழ். பல்கலையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் சற்றுமுன் பரபரப்பு
யாழ். பல்கலையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் சற்றுமுன் பொலிஸார் குழப்பம் ஏற்படுத்தியதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திடீரென வந்திருந்த பொலிஸார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டிருந்தனர்.

குறிப்பாக ஒலிபெருக்கிகளை பாவிக்க முடியாது என்றும் ஒலிபெருக்கிகளை கழற்றுமாறும் பொலிஸ் நிலையம் வந்து ஒலிபெருக்கி பாவிக்க அனுமதி எடுக்குமாறும் கூறியிருந்தனர்.
இதன் போது தாம் பல்கலைக் கழகத்திற்குள்ளே தான் ஒலிபெருக்கி பாவிப்பதாகவும் இதற்கான அனுமதி எடுக்க வேண்டுமாயின் உடன் அனுமதி தருவீர்களா என பொலிஸாரிடம் போராட்டகாரர்கள் கேட்டிருந்தனர்.
ஆனாலும் பொலிஸ் நிலையம் வந்து பொறுப்பு அதிகாரியிடம் கதைக்குமாறு பொலிஸார் கூறியிருந்தனர்.

சில தினங்களிற்கு முன்னர் தியாக தீபம் நினைவிடத்தில் பாவித்த ஒலிபெருக்கிகளை இதே பொலிஸார் தான் கழற்றிச் சென்றது மட்டுமல்லாது பல தடவைகள் கேட்டும் அந்த வலிபெருக்கிகளை இதுவரை வழங்கவும் இல்லை.
அதற்கான அனுமதியும் இதுவரை கொடுக்கப்படவில்லை. இவ்வாறு போராட்டகாரர்கள் கூறிய போதிலும் அங்கு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்த பொலிஸார் உடனடியாக ஒலி பெருக்கிகளை கழற்றுமாறும் கூறியதால் முரண்பாடு ஏற்பட்டது.
இவ்வாறாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதால் பல்கலைக் கழக போராட்டத்தில் பெரும் குழப்பமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக காலை முதல் மாலை குறித்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

39ஆவது வருட நினைவு தினம்
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பட்டனியாக இருந்து தாயக மண்ணுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபன் அவர்களது 39ஆவது வருட நினைவு தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

YOU MAY LIKE THIS..