கௌதாரிமுனையை இலக்கு வைக்கும் சீனா! மறைந்துள்ள மர்மங்கள்
சீனாவின் வருகையானது இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் சீனாவை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டதாக பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவுடைய பிரதிநிதிகள் வன்னிக்கு சென்றிருக்கிறார்கள். இரணைமடுவை பார்த்து விட்டு சொல்லியிருக்கிறார்கள் இங்கு இரால் பண்ணை உருவாக்கலாம் என. அத்துடன் நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்வதற்கான சூழல் இருக்கிறது என.
2004/2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இது இடம்பெற்றிருக்கலாம் என அன்றைய காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
பிரச்சினைக்குரிய எல்லா இடங்களிலும் சீனா உள் நுழைந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனுடைய ஒரு வடிவமாக தான் சீனா இன்றும் வேகமாக தொழிற்பட தொடங்கியிருக்கிறது.
இந்தியாவின் வருகை தெரிவதால் அவர்கள் உள்ளே வருகிறார்கள். சீனாவின் வருகை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியது என விடுதலைப் புலிகள் எண்ணினார்கள்.
எனவே இந்தியாவிற்கு அச்சுறுத்தலான விடயங்களில் அவர்கள் கைவைக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனா குறிவைக்கும் கௌதாரிமுனையில் மறைந்துள்ள இன்னும் பல மர்மங்களையும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
