ரணில் விவகாரத்தில் கடுமையான அழுத்தத்தால் பின்வாங்கும் அநுர!
சர்வதேச ஊடகத்தில் பேசப்பட்ட பின்னர் இலங்கை அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய விடயம் படலந்த சித்திரவதை முகாம்.
இந்த சித்திரவதை முகாம்கள் தொடர்பில் வெளியான தகவல்களின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த சித்திரவதை முகாம்கள் விடயத்தில் தொடர்புபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் ரணிலுடன் தொடர்புடைய நபர்கள், இடங்கள் பற்றியும் பேசப்பட்டன.
இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படலந்த அறிக்கை குறித்தும் அதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்பு குறித்தும் நடவடிக்கை எடுப்பதில் ஜனாதிபதி அநுர பின்வாங்குவதாக கூறப்படுகின்றது.
இதற்கான காரணங்கள் தொடர்பில் கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ள கருத்துக்களை இன்றைய ஊடறுப்பில் முழுமையாக காணலாம்...,