கடந்த சில மணிநேரங்களில் வளைகுடா பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்
கடந்த சில மணிநேரங்களில் வளைகுடாப் பிராந்தியத்தின் பல நாடுகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் கடந்த சில மணிநேரங்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி
இதற்கிடையில், ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், குவைத் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்பின் விளைவாகத் தாக்குதல்கள் தடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு தனது மக்களை வலியுறுத்தியுள்ளது.
துபாய், நகரின் மீது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமான இடைமறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், எந்த காயங்களும் பதிவாகவில்லை என்றும் துபாயின் அதிகாரப்பூர்வ ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்களின்" புதிய அலை
"மேலும், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின்" புதிய அலையை எதிர்கொள்வதாக குவைத் இராணுவம் கூறியுள்ளது.
இதேபோல், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம், நாட்டின் கிழக்குப் பகுதியில் பல ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல மணிநேரங்களாக ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், வடக்கில் உள்ள அல்-ஜாவ்ஃப் மாகாணத்தின் மீது பறந்த மற்றொரு ட்ரோனை இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பஹ்ரைனில் அபாய ஒலி எழுப்பப்பட்டதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், இடிந்து விழுந்த வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு! பொருட்களை வாங்குபவர்களுக்கு பரிசு அறிவிப்பு