ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான உதவிக்கரம்! நான்காவது விமானம் வந்தடைந்தது
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன், மனிதாபிமான உதவி நிவாரணங்கள் அடங்கிய விமானங்களை ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கம்..
இதன்படி, ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்கு சொந்தமான C -17 விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து.

மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட பயிற்சி பெற்ற 53 அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், புதையுண்ட இடங்களில் இருந்த மனித உடல்களை தேடும் திறன் கொண்ட மோப்ப நாய்கள் நாய்கள், அவற்றைக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் இந்த விமானத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளன.
அவர்களை வரவேற்க இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமேரி, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் வருகைதந்திருந்தனர்.




காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam