இலங்கையில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் - அமெரிக்கா எச்சரிக்கை
அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அமெரிக்கா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கிழக்கு இலங்கையின் அறுகம்பை தொடர்பில் இவ்வாறான பயணக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல்
எனவே, மறு அறிவித்தல் வரையில் அமெரிக்க பிரஜைகள் அறுகம்பை கடற்பரப்பினை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் பிரஜைகள் குறித்த பகுதியில் ஏதேனும் நெருக்கடிகளை சந்தித்தால் உடனடியாக 119 மூலம் உள்ளூர் அதிகாரிகளுக்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகள் போதியளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும், பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்திகள்
இந்தப் பகுதிக்குச் செல்வோர் தகவல்தொடர்பு சாதனங்களை இலகுவில் பயன்படுத்தக் கூடிய வகையில் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்குமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.
எனினும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |