கேரளா கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் கைது (Photo)
வாழைச்சேனை - புணாணை, மியான்குளம் பகுதியில் வைத்து 3100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று காலை வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்குக் கஞ்சாவினை வியாபாரத்திற்காக இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த நிலையில், மியான்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன்; தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கு
பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும்
வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டு வருவதாக வாழைச்சேனை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.






பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
