கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர் கைது! (Photos)
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (10) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மகேந்திரா ரக வாகனத்தில் கஞ்சாவினை கடத்தி சென்ற போது பூவே சோதனைச்சாவடியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட இராணுவம் மற்றும் பொலிஸார் வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்களை 22 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்த 22, 39 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri