வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இரு இளைஞர்கள் கைது!
செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
அதே பகுதியினை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்.
இவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
