அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்! கடந்த பொதுத்தேர்தல் பற்றிய ஒரு பார்வை!

Election Commission of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan political crisis
By K. S. Raj Aug 22, 2023 01:17 PM GMT
Report
Courtesy: பா.அரியநேத்திரன்

இந்த மாதம் 2023 ஆகஸ்ட்,05 ஆம் திகதியுடன் கடந்த 2020 ஆகஸ்ட் 05 இல் இறுதியாக இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ளன.அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே உள்ளன.

சிலவேளைகளில் அடுத்த வருடம் ஜனாதிபதி ரணில் தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைக்கவும் வாய்ப்புள்ளது.

கடந்த 2020 இல் இடம்பெற்ற தேர்தலில் ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையும் கைப்பற்றின.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் மிகப்பெரும் தோல்வியைக் கண்டது. இது ஒரேயொரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 10 ஆசனங்களை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்தது.

பிற்போடப்பட்ட தேர்தல்

நாட்டில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக தேர்தல்கள் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு, இறுதியில் 2020 ஆகஸ்ட் 5 இல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் 75% மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இது 2015 தேர்தலை விட சிறிது குறைவானதாகும்.

2018 நவம்பரில், அன்றைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

பின்னர் மீயுயர் நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்து, அடுத்த தேர்தல் தேதியை 2020 இற்கு மீண்டும் தள்ளிப் போட்டது. 2020 மார்ச் 2 ல் 15-வது நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டு, மார்ச் 12 முதல் 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்! கடந்த பொதுத்தேர்தல் பற்றிய ஒரு பார்வை! | Two Years Until Next General Election

2020 ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவிட் பெருந்தொற்று காரணமாக தேர்தலுக்கான நாள் பிற்போடப்பட்டு, புதிய நாள் ஜூன் 20 என அறிவிக்கப்பட்டது.கோவிட் தொற்று நீங்காதமையால், மீண்டும் 2020 ஆகஸ்ட் 5 இற்கு தேர்தல் தள்ளிப்போடப்பட்டது.

இந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் பெரும் பின்னடைவை சந்தித்தது.கடந்த 2015 இல் 16 ஆசனங்களைப்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு 2020 தேர்தலில் 10 ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்தது.

இதற்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையில் பிரதான காரணமாக நல்லாட்சி அரசில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதிர்கட்சி தலைவராக இரா.சம்பந்தனை கொண்ட கட்சி என காண்பிக்கப்பட்டாலும், நல்லாட்சி அரசில் இணக்கப்பாடான ஆட்சியில் நல்லாட்சி அரசில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும், புதிய அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் என்ற பூரண நம்பிக்கையுடன் ஆதரவு கொடுத்து செயல்பட்டதால் இறுதியில் நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

இதன் எதிரொலி வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் மக்களின் செல்வாக்கு குறைந்து 10 உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகும் நிலை ஏற்பட்டது.

தோல்விகளை வெற்றிப்படியாக மாற்றிய தமிழரசுக்கட்சி

அதன்படி இலங்கை தமிழரசுகட்சி வரலாற்றில் தமிழரசுகட்சி தலைவரும் செயலாளரும் ஐம்பது வருடங்களுக்கு பின்பு தோல்வியடைந்த ஒரு தேர்தல் கடந்த 2020 தேர்தலாகும்.

1970ஆம் ஆண்டு தேர்தலில் தலைவராக இருந்த அமரர் சி.மு.இராசமாணிக்கம் பட்டிருப்பு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சோ.உ. தம்பிராசாவிடம் தோல்வி கண்டார்.

செயலாளராகவிருந்த அமரர் அ. அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஆ.தியாகாராசாவிடம் தோல்வியை தழுவினார்.அது தொகுதி வாரியான தேர்தலாக இருந்தது 2020 தேர்தல் விகிதாசார தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்! கடந்த பொதுத்தேர்தல் பற்றிய ஒரு பார்வை! | Two Years Until Next General Election

அந்த 1970 தேர்தலால் தோல்வியால் தமிழரசுகட்சி வீழ்ந்து விடவில்லை தோல்விகளை வெற்றிப்படியாக மாற்றி பல சாதனைகளை படைத்தது என்பது வரலாறு. அதுபோலவே கடந்த முறை தலைவர் மாவை சேனாதிராஜா யாழ் மாவட்டத்திலும் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போட்டியிட்டனர்.தேர்தல் முடிவு இருவருக்கும் தெரிவாக முடியவில்லை.

தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து ஒன்பது ஆசனங்கள் மட்டுமே தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது அதனூடாக தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று மொத்தம் பத்து ஆசனங்களே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்தன.

ஆசனங்களை விடவும் வாக்குகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது இதற்கான முழுப்பொறுப்பும் கடந்த 2015 இல் நல்லாட்சி அரசில் இணக்கப்பாடான அரசியல் செய்தமையே காரணமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சரிவு ஏற்பட்டாலும் யாழ் மாவட்டத்தை பொறுத்தமட்டில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடையவில்லை தமிழ்தேசியம் தொடர்பான வேறு இரண்டு கட்சிகள் அங்கு முதன் முறையாக நாடாளுமன்ற ஆசனங்களை பெற்று தமிழ்தேசிய அரசியலை கால் ஊன்ற வைத்துள்ளது.

தமிழர் பிரதிநிதித்துவம்

அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக தனிநபர் ஆதிக்க அரசியல் சூழ்சியால் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரநிதித்துவம் இல்லாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனை அம்பாறை தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனியாவது திருத்தி எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்தேசிய அரசியலை பலப்படுத்த வேண்டும்.

இதனை கருத்தில்கொண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பு மூலம் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை மாவட்டத்தில் இருந்து தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டார்.அது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பாகும்.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்! கடந்த பொதுத்தேர்தல் பற்றிய ஒரு பார்வை! | Two Years Until Next General Election

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய அரசியலுக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 79182, இந்த வாக்குகளை விட ஏனைய தமிழ்தேசியம் சாராத கட்சிகள் தமிழ்தேசிய அரசியலிக்கு எதிராக மொத்தமாக 135000, வாக்குகள் கிடைத்துள்ளது.தமிழ்தேசியக் கூட்டமைப்பை விட ஏனைய எதிரான கட்சிகள் ஏறக்குறைய 50000 வாக்குகள் கூட்டமைப்பை விட அதிகமாக பெற்றுள்ளனர்.

இதனால் சிலர் தமிழ்தேசிய அரசியலில் இருந்து மக்கள் விலகி செல்கிறார்கள் என விமர்சனம் செய்கின்றனர்.

உண்மையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமிழ்தேசிய கொள்கையில் இருந்து விலகி செல்லவில்லை தேர்தல் காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட அனேகமான கட்சி உறுப்பினர்கள் பலர் தமது சில சலுகைகள் வரப்பிரசாதங்களை வழங்கி தேர்தலிற்கு முதல்நாள் அவர்களை தம் வசப்படுத்திய சம்பவங்களையும் பல இடங்களில் காணமுடிந்தது.

அதைவிட நல்லாட்சி அரசில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமார்ந்த விடயங்களும் பின்னடைவை சந்தித்தன.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் 2020, தேர்தலில் தெரிவான உறுப்பினர்கள் விபரம் (தேசியபட்டியல் தவிர்ந்து)

1.யாழ் மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி

சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 

எம்.ஏ சுமந்திரன் – 27,834 

தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

சி.வி விக்னேஸ்வரன் – 21,554 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

அங்கஜன் ராமநாதன் – 36,365 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

டக்லஸ் தேவனந்தா – 32,146 

2. வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி

சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 

செல்வம் அடைகலநாதன் – 18,563 

வினோ யோகராஜலிங்கம் – 15,190 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

காதர் மஸ்தான் – 13,454 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

குலசிங்கம் திலீபன் – 3,203 

ஐக்கிய மக்கள் சக்தி

ரிஷாட் பதியுதீன் – 28,203 

3. திருகோணமலை மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி

ஆர்.சம்பந்தன் – 21, 422

ஐக்கிய மக்கள் சக்தி

எஸ்.எம் தௌபீக் – 43, 759

இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கபில நுவன் அத்துகோரல – 30, 056

4.மட்டக்களப்பு மாவட்டம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி

இரா.சாணக்கியன் – 33,332

கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன

சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

5.திகாமடுல்ல மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

விமலவீர திஸாநாயக்க – 63,594

டீ.சி வீரசிங்க – 56,00

திலக் ராஜபக்ஷ 54,203

ஐக்கிய மக்கள் சக்தி

எம்.எச்.எம் ஹரீஸ் – 36,850

பைஸல் காசிம் -29,423

தேசிய காங்கிரஸ்

ஏ.எச்.எம் அதாவுல்ல – 35,697

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மொஹமட் முஸரப் -18,389

வடக்கு கிழக்கில் மொத்தம் எட்டு மாவட்டங்களாக நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டாலும், தேர்தல் மாவட்டங்களாக ஐந்து மாவட்டங்களே உள்ளன.

வடமாகாணத்தில் கிளிநொச்சி யாழ் மாவட்டத்துடனும், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகியன வன்னிமாவட்டமாகவும் தேர்தல் மாவட்டங்கள் அமைந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை( திகாமடுல) மூன்று மாவட்டங்களும் நிர்வாக மாவட்டங்களாகவும், தேர்தல் மாவட்டங்களாகவும் தொடர்ந்து உள்ளதை அறியலாம்.

நல்லாட்சி அரசு

உண்மையில் 2004 இல் புலிநீக்க அரசியலை செய்து விடுதலைப்புலிகளை இரண்டாக உடைத்த பெருமைக்குரிய ரணில்விக்ரமசிங்க 2015  தொடக்கம் 2019 வரை தமிழ்தேசிய நீக்க அரசியலுக்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பை நல்லாட்சி அரசில் சில அபிவிருத்திகளையும், வேலைவாய்ப்புகளையும், சில சலுகைகளையும் தமிழ்தேசியக்  கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளது.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்! கடந்த பொதுத்தேர்தல் பற்றிய ஒரு பார்வை! | Two Years Until Next General Election

இதன் மூலம் பல அபிவிருத்திகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் என்றுமில்லாத வகையில் பல கோடி நிதிகள் ஒதுக்கப்பட்டு கம்பரலிய வீதி அமைப்புகள், ஆலயம், பாடசாலை, பொதுக்கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள், குளங்கள், வீட்டுத்திட்டங்கள் என பெரியளவில் விளம்பரப்படுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திகளை முன்னெடுத்தாலும் அதனை விட காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதி, தமிழ் அரசியல் சிறை கைதிகள் விடுதலை, போரினால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர புனர்வாழ்வு திட்டம், அரசியல் தீர்வு விடயம், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்தப்படாமை இது போன்ற தமிழ் மக்கள் எதீர்பார்த்த பல விடயங்களை முற்றாக நல்லாட்சி காலத்தில் செய்யாமல் பிரதமர் ரணிலும், ஜனாதிபதி மைத்திரியும் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றியதன் விளைவு 2020, தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாரிய சரிவை சந்தித்தது என்பது உண்மை.

2015 தொடக்கம் 2020 வரை நல்லாட்சியில் பிரதமராக இருந்த ரணிலும் அவரின் ஐக்கிய தேசிய கட்சியும் முழுமையாக 2020 தேர்தலில் படுதோல்வி கண்டது. அந்த கட்சிக்கு இலங்கை சரித்திரத்தில் ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்த போதும் அந்த பதவியை யார் எடுப்பது என தட்டிக்கழித்த ரணில். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், இவரது கட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.

ஜனாதிபதியான ரணில்

இருப்பினும், கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் சுமார் 11 மாதங்கள் கடந்து ஏனோதானோ என்ற நிலையில் இவர் 2021 ஜூன் 23ஆம் திகதி நாடாளுமன்றம் சென்றார்.

இவரின் அதிர்ஷ்டம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து 2022 ஜூலை 21 இல் ஐனாதிபதியானார்.

தற்போது ஒருவருடம் அவரின் பதவிக்காலம் கடந்துள்ள நிலையில் மீண்டும் மக்கள் ஆணைமூலம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முற்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தி தாம் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார்.

இதற்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் தந்திரமாக 13வது அரசியல் யாப்பை அமுல்படுத்த போவதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள்! கடந்த பொதுத்தேர்தல் பற்றிய ஒரு பார்வை! | Two Years Until Next General Election

நிச்சயமாக வடக்கு கிழக்கு மக்களுக்கான எந்த அரசியல் தீர்வும் வருவதற்கான அறிகுறிகள் இப்போது தென்படவில்லை ஆனால் 13ஐ பேசும் பொருளாக வைத்து அடுத்த வருடம் வரை இதனை கதைத்துக்கொண்டே ஜனாதிபதியாக தாம் தெரிவாகும் நாடகமாகவே இது தொடர வாய்ப்புகள் உள்ளது! 

மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US