விடுதியிலிருந்து நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட யுவதிகள் - குடும்ப பெண்ணின் கணவன் கூறும் விடயம்

Investigation Police Trincomalee
By Independent Writer Oct 11, 2021 05:53 AM GMT
Report

திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் நடந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த யுவதிகள் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் - ஆறுமுகத்தான் குடியிருப்பை சேர்ந்த (19 வயது) யுவதியும், மாவடிச்சேனை - கரடியனாறு பகுதியை சேர்ந்த (29 வயது) இளம் குடும்ப பெண்ணுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 29 வயதான பெண்ணின் இரண்டரை வயது குழந்தை சம்பவம் நடந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரண்டு இளம்பெண்களும் கடந்த 6ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் வீடு திரும்பாத நிலையில் கடந்த 8ஆம் திகதி, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் குடும்பப் பெண்ணின் கணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் யுவதிகள் இருவரும் கடந்த 9ஆம் திகதி திருகோணமலை நகருக்கு வந்துள்ளதுடன், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று, அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் நீண்ட நேரமாக பாடல் ஒலித்தபடி இருந்துள்ளது.

பின்னர், குழந்தையும் நீண்ட நேரமாக தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர், பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனையிட்ட போது யுவதிகள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மதுபானத்துடன் நஞ்சு கலந்து அருந்தியதாக கூறப்படும் நிலையில் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து திருகோணமலைக்கு வந்த கரடியனாறு குடும்ப பெண்ணின் கணவனிடம் அவரது குழந்தை கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், நஞ்சருந்திய இரு பெண்களும் மிக நெருக்கமாக பழகியதாகவும், இந்த நட்பினால் தமது குடும்பத்திற்குள் முரண்பாடு தோன்றியிருந்ததாகவும் குடும்பப் பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

மேலும், 19 வயது யுவதியும், தமது மனைவியும் இரவு நீண்டநேரமாக கையடக்க தொலைபேசியில் குறுஞ்செய்தி பரிமாறிக் கொண்டிருப்பதாகவும், இதை நிறுத்தும்படி பலமுறை கூறியும், மனைவி நிறுத்தாததால், அவரது கையடக்க தொலைபேசியை ஒருமுறை உடைத்திருந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

GalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US