கூர்மையான ஆயுதங்களால் இரண்டு பெண்கள் அடித்துக் கொலை
ஹுங்கம, அத்பட்டுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் கூர்மையான ஆயுதத்தில் தாக்கப்பட்டு பெண்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்த 39 மற்றும் 67 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 67 வயதுடைய பெண்ணின் கணவர் ஹுங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற கத்தி ஒன்றும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகிய ஒருவராகும் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 39 வயதுடைய பெண் 67 வயதுடைய பெண்ணின் மருமகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
